சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடி மாதம் காரணமாக கால்நடைகள் விலை சரிவடைந்துள்ளது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடி மாதம் காரணமாக கால்நடைகள் விலை சரிவடைந்துள்ளது.

ஆடி மாதங்களில் திருமணம் போன்ற விசேசங்கள நடத்த மாட்டார்கள். விசேச தினங்கள் இல்லாததால் திருப்புவனத்தில் இன்று நடந்த கால்நடை சந்தையில் ஆடு, கோழிகளின் விலை சரிந்து காணப்படுகிறது


திருப்புவனம் சந்தைக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்து ஆடு, கோழிகளை வாங்கி செல்வார்கள், திருப்புவனம் வட்டாரத்தில் செல்லப்பனேந்தல், மணல்மேடு, பெத்தானேந்தல், கணக்கன்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆடு, கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.


இன்றைய சந்தைக்கு ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிந்தன. விலையும் எதிர்பார்த்த அளவு கிடைக்காததால் விவசாயிகளும் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad