இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 August 2022

இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக இயற்கை சீற்றமும் பாதுகாப்பு முன் எச்சரிக்கையும் என்னும் தலைப்பில்" பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் அஸ்மத் பாத்திமா வரவேற்பு உரையாற்றினார், கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மந்திரி தலைமை உரையாற்றினார், சிறப்பு விருந்தினராக மானாமதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையா அலுவலர் குமரேசன் கலந்து கொண்டு இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.


நிகழ்வினை நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் முனைவர் பீர்முகமது முனைவர் அப்ரூஸ் இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் நர்கீஸ் பேகம் ஆகியோர் ஒருங்கிணைந்தனர் நிகழ்வில் 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad