அகழாய்வின்போது கூடுதல் உறைகிணறு கண்டுபிடிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

அகழாய்வின்போது கூடுதல் உறைகிணறு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த அகரம் கிராமத்தில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு நடந்த அகழாய்வில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


ஐந்தாவது குழியில் சுமார் 4 அடி ஆழத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும் போது உறைகிணறு வெளிவந்தது. மேலும் தொடர்ந்து பணிகள் செய்தபோது கூடுதலாக ஒரு உறை தென்பட்டது. மொத்தம் இரண்டு அடுக்குகளுடன் உறைகிணறு உள்ளது.


தொடர்ந்து அகழாய்வு பணிகள் செய்யும் போது இன்னும் கூடுதலாக சுடுமண் உறை அடுக்குகள் கிடைக்கலாம் எனவும் தெரிய வருகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad