தங்கம் வென்ற தடகள வீரருக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

தங்கம் வென்ற தடகள வீரருக்கு பாராட்டு விழா.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள அரியவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தங்கம் வென்ற தடகள வீரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 


திருப்புவனத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, காவல் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், அண்மையில் சர்வதேச அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று தங்க வென்றுள்ளார்.


இதையடுத்து, அரியவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் காவல் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை அப்பள்ளியின் முதுநிலை முதல்வர் ராமச்சந்திரன் வழங்கினார்.


அப்போது பள்ளியின் முதல்வர் கண்ணன் உள்பட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad