வைகை ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் விளையாடும் பள்ளி மாணவர்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 August 2022

வைகை ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் விளையாடும் பள்ளி மாணவர்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வந்தடைந்தது இதனால் தண்ணிர் வைகை ஆற்றில் கரையின் இருபுறமும் ஆர்ப்பரித்துக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. 


இந்நிலையில் திருப்புவனம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சீருடையை மற்றும் பேக்கை கழட்டி வைத்துவிட்டு திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தின் அடியில் அச்சமின்றி குளித்து வருகின்றனர். 


ஏற்கனவே இதே இடத்தில் கடந்த வருடம் இரண்டு மாணவர் சூழலில் சிக்கி இந்த இடத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் வைகை ஆற்று வெள்ளத்தில் குளித்து வருகின்றனர்.


இதை தடுக்கும் பொருட்டு பள்ளி நடக்கும் நேரங்களில் வைகைக் ஆற்று கரையோரம் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad