இரவில் நடமாடும் போதை ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 August 2022

இரவில் நடமாடும் போதை ஆசாமிகளால் பொதுமக்கள் அச்சம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து சில நாட்களாக போதையில் இளைஞர்கள் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. 


இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாடுவதற்கே பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர், இந்நிலையில் திருப்புவனம் தேரடி வீதி பகுதியில் மது அருந்திவிட்டு இளைஞர்கள் சிலர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருந்த அரசு கழிவறைகளை அனைத்தையும் அடுத்து நொறுக்கி சேதம் செய்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


அப்போதுதான் இரவில் சுதந்திரமாக நடமாட முடியும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad