செந்தமிழ் நகர், பெரும்பச்சேரி, மாதவநகர், தாயமங்கலம் பகுதிகளில் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

செந்தமிழ் நகர், பெரும்பச்சேரி, மாதவநகர், தாயமங்கலம் பகுதிகளில் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள செந்தமிழ் நகர் திரும்பசேரி ஆகிய பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


முன்னதாக இளையான்குடி பஜார் பகுதியில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று கண்மாய் கரையில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் மாதவனகர் தாயமங்கலம் கோட்டையூர் அன்டக்குடி பகுதிகளில் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன், இளையான்குடி பேரூர் செயலர் நஜ்முதீன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad