75வது சுதந்திர தின விழா : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மூவர்ண தேசிய கொடி வரையப்பட்டுள்ளது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 8 August 2022

75வது சுதந்திர தின விழா : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மூவர்ண தேசிய கொடி வரையப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.


அதனை முன்னிட்டு இளையான்குடி பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கிராம ஊராட்சி மன்றங்கள் ஆகிய அலுவலகங்களில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நகர்புறங்கள், கிராமப்புற முக்கிய இடங்களில் தேசியக்கொடி வரைந்து வண்ணமிடும் பணி நடைபெறுகிறது. சாலைக்கிராமம் ஊராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மூவர்ணம் தீட்டி, தேசிய கொடி வரையும் பணி நடைபெற்று வருகிறது. 


நாட்டின் சுதந்திர போராட்டத்தையும், தியாகத்தையும் போற்றும் விதமாக, வரையப்பட்டுள்ள மூவர்ண கொடி பார்ப்பவர்கள் மனதில் ஒருமைப்பாட்டை உருவாக்கி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad