கீழடி, அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர் மழையால் பாதிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 August 2022

கீழடி, அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர் மழையால் பாதிப்பு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள்பிதொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.


கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்பட்டிருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 8ம் கட்ட அகழாய்வில் கொந்தகையில் இதுவரை 54 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.


முதுமக்கள் தாழிகளினுள் உள்ள பொருட்களை ஜூலை 30ல் தொல்லியல் ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம், மதுரை காமராஜ் பல்கலை மரபணு பிரிவு பேராசிரியர் குமரேசன், தொல்லியல் துறை இணை இயக்குனர் (கீழடி அகழாய்வு) ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் காவ்யா, அஜய் தலைமையிலான குழு வெளியே எடுக்கும் பணியை துவங்கியது. அடுத்தடுத்து மழை பெய்து வருவதால் மற்ற தாழிகளினுள் பொருட்களை வெளியே எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 


மழை நேரத்தில் தாழிகளினுள் உள்ள பொருட்களை வெளியே எடுத்தால் மரபணு சோதனையில் முடிவுகள் மாறுபடும் என்பதால் பொருட்களை எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 


மழை முற்றிலும் நின்றபிறகு பணிகள் தொடரும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad