பருத்தி விலை சரிவு விவசாயிகள் அதிருப்தி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 August 2022

பருத்தி விலை சரிவு விவசாயிகள் அதிருப்தி.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிகளில் பருத்தி அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது, கடந்த ஜூன் மாதம் வரை ஒரு கிலோ பருத்தியை கிலோ ரூ. 120 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்து வந்தனர். அதனடிப்படையில், ஒரு குவிண்டால் பருத்திக்கு ரூ. 12 ஆயிரம் வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


வேளாண் வணிகம் ஒழுங்குமுறை விற்பனைக் குழு சுய உதவிக் குழு மற்றும் உழவர் உற்பத்திக் குழு மூலம் விவசாயிகளிடம் நேரடியாக பருத்தி கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இக்குழுவினர் பருத்தியில் உள்ள ஈரப்பதத்தை காரணம் காட்டி விலையைக் குறைத்துக் கேட்கின்றனர். 

இதனால் விவசாயிகள், தனியார் வியாபாரிகளிடம் பருத்தியை கிலோவுக்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் நூல் விலை உயர்வால் பருத்தி கொள்முதலை ஆலை நிர்வாகத்தினர் வாங்க மறுத்து வருவதாகக் கூறி, வியாபாரிகள் தற்போது பருத்தி விலையை செயற்கையாக குறைத்துள்ளனர். 


இதன் காரணமாக பருத்தி தரத்தின் அடிப்படையில் கிலோ ரூ. 65 முதல் ரூ. 72 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad