75-வது சுதந்திர தின விழாவை ரத்தம் வழங்கி கொண்டாட்டிய மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

75-வது சுதந்திர தின விழாவை ரத்தம் வழங்கி கொண்டாட்டிய மாவட்ட ஆட்சியர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஆகியவை சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை ரத்தம் வழங்கி கொண்டாடினர். 


இதை யொட்டி நடந்த ரத்ததான முகாமிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார். இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் படிக்கும் மாணவ - மாணவிகள் 75 பேர் கலந்து கொண்டு தானாக முன்வந்து ரத்ததானம் செய்தனர்.


முகாம் ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad