மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டாரத்தில் ஆண்டு தோறும் 4 ஆயிரம் ஹெக்டேரிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர். எஸ். மங்கலம், முதுகுளத்தூர், பரமக்குடி, சாயல்குடி ஆகிய வட்டாரத்தில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேரிலும், ராம்நாடு முண்டு எனப்படும் குண்டு மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 


செப்டம்பர் முதல் மார்ச் வரை மிளகாய் சாகுபடியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் விவசாயிகள் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் அதிகளவில் செல்கிறது. 


மேலும் தூத்துக்குடி, சென்னை கடல் வழியாகவும், திருச்சி, கோவை, சென்னை ஆகிய வான் வழியாகவும், கத்தார், ஓமன், துபாய், சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஆகிய கிழக்காசியா நாடுகளுக்கும் இந்த குன்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சம்பா மிளகாய் எனப்படும் குச்சி மிளகாயை விட இந்த குண்டு மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன. குண்டு மிளகாய் பொடி உணவு பயன்பாட்டுக்கும், மிளகாய் எண்ணெய் தயாரித்து மருத்துவ பயன்பாட்டுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.


அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குன்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இளையான்குடி வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad