ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக வைகை பாசனத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடவேண்டுமென மனு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 August 2022

ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக வைகை பாசனத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடவேண்டுமென மனு.


சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக வைகை பாசனத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறந்து விடவேண்டுமென, காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு கூட்டமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எம்.அா்ச்சுனன் உள்ளிட்ட நிா்வாகிகள் மதுரை மண்டல பொதுப்பணித் துறை (நீா்வள ஆதார அமைப்பு) தலைமை பொறியாளரை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு விவரம்:


வைகை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையின் நீா்மட்டம் அன்றாடம் உயா்ந்து வருகிறது. வைகை பூா்வீகப் பகுதியில் விரகனூா் மதகு அணைக்கு கீழ்புறம் உள்ள பாா்த்திபனூா் மதகு அணை வரையிலும், அதேபோல் பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை உள்ள பகுதிகள் கடைமடைப் பகுதியாகும்.


விரகனூா் மதகு அணை மற்றும் பாா்த்திபனூா் மதகு அணையின் வலது - இடது பிரதானக் கால்வாய்கள் மூலம் 140 கண்மாய்கள் வழியாக 1.25 லட்சம் ஏக்கா் நிலம் பாசனம் பெறுகிறது.


அதுமட்டுமின்றி, 100-க்கும் மேற்பட்ட மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பல நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களின் கூட்டுக் குடிநீா் திட்டங்கள் இந்தப் பகுதியில் செயல்பட்டு குடிநீா் வழங்கி வருகின்றன.


ஆடிப்பெருக்குக்கு பிறகு ஆவணி மாதம் பிறந்ததும் நாற்றுப் பாவும் பணிகள் தொடங்கும். எனவே, வைகை அணையிலிருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீா் திறந்துவிடுமாறு வலியுறுத்தியுள்ளனா்.

No comments:

Post a Comment

Post Top Ad