மான்போர்ட் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 தேசிய கொடியினை ஏற்றி கொண்டாட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 August 2022

மான்போர்ட் பள்ளியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 தேசிய கொடியினை ஏற்றி கொண்டாட்டம்.

சிவகங்கை அருகில் அமைந்துள்ள மான்போர்ட் பள்ளியில் 9ஆம் ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு மாணவர்கள் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பெற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக மண்டல அளவில் CBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுவில் முதலிடம் பெற்று (496/500) சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி ஜனனிப்ரியா மற்றும் அவரது பெற்றோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து நம் நாட்டிற்காக இன்னுயிர் நீர்த்த தியாகிகளையும், வீரர்களையும் மரியாதை செய்யும் நிகழ்வாக 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 கொடி மரங்களில் மாணவர்களின் பெற்றோரும், ஆசிரியர்களும், சிறப்பு விருந்தினர்களும் 75 தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தனர். 


இந்த விழாவிற்கு திருச்சி மண்டல மான்போர்ட் சபை தலைவர் முனைவர் இருதயம் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முகமது சலாஜுதீன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த விளையாட்டு விழாவினை பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் விக்னேஷியஸ் தாஸ் தலைமையில் விளையாட்டு விழா நடைபெற்றது. 


இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad