இரு தரப்பினர் ஆயுதங்களால் தாக்கியதில் 4 பேர் காயமுற்றனர்; 46பேர் மீது வழக்கு பதிவு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 17 August 2022

இரு தரப்பினர் ஆயுதங்களால் தாக்கியதில் 4 பேர் காயமுற்றனர்; 46பேர் மீது வழக்கு பதிவு.

சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் இரு தரப்பினர் ஆயுதங்களால் தாக்கியதில் 4 பேர் காயமுற்றனர் சம்பவத்தில் ஈடுபட்டதாக 46 பேர் மீது மதகுபட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சிவகங்கை அருகே கீழப்பூங்குடி அம்பேத்கர் தெரு ராமசந்திரன் மகன் ரகுராமன் 28, செல்வம் மகன் மகிபாலன் 19. இவர்கள் இருவரும் கீழப்பூங்குடி மேலத்தெருவில் உள்ள ஒரு பிரிவினருக்கு சொந்தமான மந்தை திண்ணையில் காலணி அணிந்த நிலையில் அமர்ந்துள்ளனர்.கோயில் முளைப்பாரி வைக்கும் திண்ணையில் இது போன்று உட்காரக்கூடாது என மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர். 


இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆயுதங்களுடன் வந்த பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் லோகு 45, பிரபு 33, ஆதிமுனியாண்டி 22, பாலா 32, ரஞ்சித் 19, ஆதி 20, முனியாண்டி 60, ரமேஷ் 50, செந்தில் 25, அர்ச்சுனன் 25 உட்பட 38 பேர் ஆயுதங்களுடன் தாக்கினர். இதில் ரகுராமன், மகிபாலன் இருவரும் காயமுற்றனர். காயமடைந்த ரகுராமன், மகிபாலன் ஆகியோர் தலைமையில் அம்பேத்கர் தெரு புனித் 22, சஞ்சய் 17, ராகுல் 18, விஷ்ணு 22, பிரகாஷ் 21, பிரவீன் 25 ஆகியோர் ஆயுதங்களுடன் சென்று தாக்கியதில் கீழப்பூங்குடி மேற்கு தெரு ஆதினமிளகி மகன் பாலா 32, காளிமுத்து மனைவி பஞ்சவர்ணம் இருவரும் காயமுற்றனர். 


சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் இருதரப்பை சேர்ந்த 46 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad