சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சத்தில் கட்டிய அம்மா பூங்காவில் உபகரணங்கள் உடைந்து பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது.சிவகங்கை ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சி சார்பில் அரசு மருத்துவமனை அருகே ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது.
இதில் நவீன விளையாட்டு உபகரணங்கள் பொருத்தியிருந்தனர். ஆரம்பத்தில் முறையாக பூங்காவை பராமரித்து வந்தனர். மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள், கர்ப்பிணிகள் காலை, மாலையில் இங்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பூங்காவை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டதால் உபகரணங்கள் அனைத்தும் உடைந்து பயனின்றி கிடக்கிறது. பூங்கா வளாகமும் செடிகள் வளர்ந்து முட்புதர் மண்டிக்கிடக்கின்றன.
No comments:
Post a Comment