அரசுப் பேருந்தின் டயர் வெடித்து கால்வாயில் புகுந்ததில் 14 பயணிகள் காயமடைந்தனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 August 2022

அரசுப் பேருந்தின் டயர் வெடித்து கால்வாயில் புகுந்ததில் 14 பயணிகள் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து கால்வாயில் புகுந்ததில் 14 பயணிகள் காயமடைந்தனர், ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. திருப்பாச்சேத்தி அருகே சம்பராயனேந்தல் என்ற இடத்தில் சென்றபோது, பேருந்தின் வலது பக்க முன் டயர் வெடித்தது. இதில் பேருந்து நிலை தடுமாறி சாலையின் நடுப்பகுதியைக் கடந்து அங்கிருந்த கால்வாய்க்குள் புகுந்து நின்றது.


பேருந்தை ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 14 பயணிகள் காயமடைந்தனர். இவர்கள் மானாமதுரை, மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர், இது குறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad