வழக்கை ரத்து செய்ய, 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 August 2022

வழக்கை ரத்து செய்ய, 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது.

மதுரை மாவட்டம், மேலுார் கருக்காலங்குடியைச் சேர்ந்தவர் ஹக்கீம், 40. இவர் மீது இடப் பிரச்னை தொடர்பாக, மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பாக ஒரு வழக்கு, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும் பதிவு செய்யப்பட்டது.


ஒரே குற்றத்திற்கு இரு இடங்களில் வழக்கு பதிவு செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால், ஏதாவது ஒரு இடத்தில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் பதிவான வழக்கை ரத்து செய்ய, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை ஹக்கீம் அணுகினார். இன்ஸ்பெக்டர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கொடுக்க விரும்பாத ஹக்கீம், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். 


ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாயை, சிவகங்கை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பெற்ற போது, கையும், களவுமாக சிக்கினார். அவரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad