151 ஆண்டுகளாக பழமை மாறாத மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 August 2022

151 ஆண்டுகளாக பழமை மாறாத மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொடர்ந்து 151 ஆண்டுகளாக பழமை மாறாமல் பாரம்பரியமாக வருடந்தோறும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழாவை கொண்டாடி வருகின்றனர். 


மானாமதுரை கன்னார் தெரு முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆடி முளைப்பாரி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. காப்பு கட்டி விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கல் விழாவன்று வைகை ஆற்றில் இருந்து பால்குடம், பறவைக்காவடி, அலகு குத்தி எடுத்து வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டு வீதிகளின் வழியே வலம் வந்து அலங்கார குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர். மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சளால் அபிேஷகம் செய்யப்பட்ட தெருக்களில் மாமன், மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும், முறை பெண்கள் மீது ஆண்களும் மஞ்சள் தண்ணீரை ஊற்றி கொண்டாடினர். 

No comments:

Post a Comment

Post Top Ad