கிழடியில் சுற்றுச்சூழலை பாதிக்காதவகையில் தங்கத்தை பண்டைய தமிழர்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 July 2022

கிழடியில் சுற்றுச்சூழலை பாதிக்காதவகையில் தங்கத்தை பண்டைய தமிழர்கள்.

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தளம் மற்றும் பொருட்களை பாதுகாக்க வேண்டும் என பெங்களுரூ வேத ஆய்வாளர் டாக்டர் சுருதி வலியுறுத்தியுள்ளார். கீழடியில் நடந்து வரும் அகழாய்வை காண பெங்களுரூவைச் சேர்ந்த வேத அறிவியல் ஆய்வாளர் டாக்டர் சுருதி மற்றும் மலேசிய பிரஜையான மோகன் சுப்ரமணியம் வந்தனர். 


டாக்டர் சுருதி கூறுகையில்: உயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பழங்கால அறிவியல் முறைகளை ஆய்வு செய்கிறேன். கீழடியில் தங்கம், வெள்ளி, சுடுமண் பொருட்கள் உள்ளிட்டவற்றை சுற்றுச் சூழலை மாசுபடாத வண்ணம் தயாரித்துள்ளனர். தங்க சுரங்கம் உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்த போது தங்கத்தில் பொருட்கள் தயாரிக்கும் போது பாதரசத்தை பயன்படுத்துவார்கள், ஆனால் கீழடியில் அதுபோன்று சுற்றுச்சூழலை பாதிக்காதவகையில் தங்கத்தை பயன்படுத்தியுள்ளனர். 


பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம், கேரளாவிலும் கீழடி என்ற ஊர் உண்டு. பண்டைய கால இடங்களை பாதுகாக்க வேண்டும் என்றார் 

No comments:

Post a Comment

Post Top Ad