மானாமதுரை பகுதியில் பெட்ரோல் திருடும் திருடர்கள் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

மானாமதுரை பகுதியில் பெட்ரோல் திருடும் திருடர்கள் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆதனூர் சோமசுந்தரம் காலணி தெருவில் சாலைகளின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்த நிலையில் அதேபகுதியில் உள்ள ஷேக் தாவூத் என்பவர் வீட்டில், இரு தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சுவர் ஏறி குதித்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை திருடும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமேராவில் பதிவாகியுள்ளது.


இப்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், புகார் அளித்து இரு தினங்களுக்கு மேல் ஆகியும் காவல்துறை அப்பகுதிக்கு வந்து விசாரணைநடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இன்று வாசலில் பெட்ரோல் திருட்டும் திருடர்கள் நாளை வீட்டிற்குள் வந்து திருடுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் திருடர்களை பெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகளை கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad