வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் நாய்கள் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் நாய்கள் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய் மற்றும் கால் நடைகளால் பொதுமக்கள் அதிகளவில் விபத்துகளை சந்திக்கும் நிலை ஏற்படுகின்றது. 


வெறிநாய்களை பிடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள், மானாமதுரையில் உள்ள வீதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றது.


இதனால் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு வாகனங்களில் செல்லுபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்களை துரத்தி வந்து சிறியவர்கள் முதல் பெரியவர்களை கடிக்கின்றன.


நெடுஞ்சாலையிலும் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் பெரும் விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகின்றது, கடந்த சில மாதங்களில் பொதுமக்களை அதிகளவில் நாய்கள் கடித்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனவே நாய்களை பிடிக்கநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad