நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பணிகள் துவக்கம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 July 2022

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பணிகள் துவக்கம்.

சிவகங்கை நகராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலமாக மரம் நடுவீர் பயன்பெறுவீர் பசுமையான சூழ்நிலை ஏற்படும் விதாமாக குண்டூரணி கரை சுற்றி 250 மரக்கன்றுகளை நட்டு வைத்து நீர்நிலை ஆதாரங்களை பாதுகாக்கவும் அதில் உள்ள பிளாஸ்டிக், பாலீதின்  கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிவைத்தார்.


நகர்மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த் மேலும் நகரை பசுமையாக மாற்றுவதற்கு உறுதிமொழி ஏற்பு நடந்தது இவ்விழா நகர் மன்ற உறுப்பினர் கீதா கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது இவ்விழாவில் நகர்மன்றத் துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், குடியிருப்பு நலச் சங்கம், பள்ளி மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad