18 அடி நீளத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக ராட்சத அரிவாள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

18 அடி நீளத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக ராட்சத அரிவாள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடாரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகுவெட்ட பயன்படும் அரிவாள், இறைச்சி வெட்டப் பயன்படும் கத்திகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. 


மேலும் கோவில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயாரித்துக் கொடுக்கின்றனர். இந்த நிலையில் நேற்று 18 அடி உயர ராட்சத அரிவாள் இங்குள்ள பட்டறையில் தயார் செய்யப்பட்டது.

இதுகுறித்து அரிவாள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில் எங்களிடம் மதுரையில் உள்ள தனியார் தொழில் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் 18 அடி நீளத்தில் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க ராட்சத அரிவாள் தயார் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் பேரில் அடிக்கு ரூ. 2250 வீதம் கூலி பேசி ரூ. 42 ஆயிரத்தில் ராட்சத அரிவாள் தயார் செய்தோம். இந்த ராட்சத அரிவாளை 10 நாட்களில் தயாரித்துள்ளோம். 


இதன் எடை சுமார் 200 கிலோ இருக்கும். இந்த அரிவாளின் மூக்கு பகுதி மட்டும் 3 அடி அகலம், கைப்பிடி 8 இஞ்ச் அகலத்தில் 30 கிலோ எடையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிவாள் மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட உள்ளது எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad