மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பள்ளியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 18 July 2022

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பள்ளியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி பள்ளியை திங்கள்கிழமை பெண்கள் உள்ளிட்ட ஏராளமான காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.


இவர்களை காவல் துறையினர் சமாதானம் செய்தனர். மானாமதுரையில் சிவகங்கை சாலையில் அரசு நிதி உதவி பெறும் சி.எஸ்.ஐ செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இது குறித்து வெளியில் கூறினால் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மாணவிகளை மிரட்டுவதாகவும் சிவகங்கை மாவட்ட காது கேளாதோர் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தனர்.


மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் மனுக் கொடுத்தனர், ஆனால் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காது கேளாதோர் நலச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad