தந்தையைகொன்ற மகன் கைது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

தந்தையைகொன்ற மகன் கைது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சொத்தைப் பிரித்துக் கொடுக்காத தந்தையை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு குத்திக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சோந்தவர் கந்தசாமி மகன் பழனியாண்டி (68). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மதுரையில் வசித்து வரும் மூத்த மகன் அய்யங்காளை (40) ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.


இவர் தனக்கு சேர வேண்டிய சொத்தைப் பிரித்து தருமாறு கூறி அடிக்கடி தந்தையுடன் தகறாறு செய்து வந்துள்ளார். ஆனால் சொத்தை பிரித்துத் தருவதில், பழனியாண்டி தாமதப்படுத்தி வந்தார்.


இதனால் ஆத்திரமடைந்த அய்யங்காளை மதுரையிலிருந்து வெள்ளிக்குறிச்சி கிராமத்திற்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்து, அங்கு டீக்கடைக்குள் தூங்கிக் கொண்டிருந்த தந்தை பழனியாண்டியை கத்தியால் குத்திக் கொலை செய்தார். அதன்பின்னர் இவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.


புதன்கிழமை காலை பழனியாண்டி டீக்கடைக்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த குடும்பத்தினர், மானாமதுரை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர், அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து அய்யங்காளையைக் கைது செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad