கணவன் மனைவி இருவரும் மதுவில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து பலி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 26 June 2022

கணவன் மனைவி இருவரும் மதுவில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து பலி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவத்தாவு பகுதியே சேர்ந்த மாரிமுத்து இவர் மனைவி முத்துமாரி மற்றும் மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் பொள்ளாச்சியில் தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர்.


சிறுமி தனது தாத்தா மணி (வயதான முதியவர் வயது 70 ) வீட்டில் சிறுவயதில் இருந்து படித்து வருகிறார். வேலைப்பளு காரணமாக கணவன் மனைவி இருவரும் மது அருந்ந ஆரம்பித்துள்ளனர். நாளடைவில் இருவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவன் மனைவி இருவரும் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளனர், இங்கு வந்தும் கணவன் மனைவி இருவரும் தினமும் மது அருந்த ஆரம்பித்துள்ளனர்.


இந்நிலையில் தாத்தா மணி இவர்களைக் கண்டித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் மது அருந்தினால் பிள்ளையை  எப்படி வளர்ப்பது என்று கண்டித்துள்ளார். இதனால் இருவரும் கோபித்துக் கொண்டு திரும்பவும் பொள்ளாச்சிக்கு வேலைக்கு சென்றுள்ளனர்.


ஆனால் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கையில் வைத்திருந்த எட்டாயிரம் ரூபாய் பணத்தை பறி கொடுத்ததாகக் கூறப்படுகிறது, ஒருபுறம் பணத்தை பறிகொடுத்த சோகம் மறுபுறம் மது பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியாத நிலை, இதனால் விரக்தி அடைந்த கணவன் மனைவி இருவரும் மறுபடியும் பொள்ளாச்சியில் இருந்து பேருந்து ஏறி மானாமதுரை வந்து நவததாவு கிராம கண்மாய்க்குள் கணவன் மனைவி இருவரும் மதுவில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்துவிட்டு அங்கேயே மயங்கி கிடந்துள்ளனர். 


அதன் வழியாக சென்றவர்கள் இவர்களை மீட்டு அரசு சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து கணவர் மாரிமுத்து உயர் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர், இந்நிலையில் மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி முத்துமாரி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். 


இவரது நிலைமை  மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவரும் மதுவுக்கு அடிமையாகி விஷமருந்தி இறந்த சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கணவன் மனைவி இருவரும் செய்த தவறுக்கு சிறுமி வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது மாணவியின் படிப்பு செலவுக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad