மன்னர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவை முன்னிட்டு இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

மன்னர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவை முன்னிட்டு இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.


மாமன்னர் முத்துவடுகநாதரின் 250-வது வீர வணக்க நாள், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 83வது துவக்க விழா மற்றும் ராணி மதுராந்தகி நாச்சியாரின் பிறந்தநாளை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒருபகுதியாக சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. 


இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச சிகிச்சை பெற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad