தேசிய அளவிலான போட்டிக்குஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை தேர்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

தேசிய அளவிலான போட்டிக்குஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை தேர்வு.

தேசிய அளவிலான போட்டிக்குஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை தேர்வு தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தோவான மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஆக்ராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு புறப்பட்டுச் சென்றார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை கலைச்செல்வி, மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார். இந்நிலையில் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஜூலை 20 ஆம் தேதி வரை நடக்கிறது. 


இப்போட்டியில் தமிழகம் சார்பில் 10 போர் கொண்ட குழுவில் உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வியும் ஒருவராகதேர்வு செய்யப்பட்டுள்ளார், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஏக்லவியா மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ள கலைச்செல்வி புறப்பட்டுச் சென்றார், அவரை சிவகங்கை மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களும், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad