சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விளைச்சல் பாதிப்பால் பெங்களூரு வெற்றிலை விற்பனைக்கு வந்துள்ளது. திருப்புவனத்தில் கலியாந்தூர், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் வெற்றிலை சுருங்கி விளைச்சல் பாதிக்கப்பட்டது.
போதிய விளைச்சல் இல்லாததால் பெங்களுரூவில் இருந்து வெற்றிலை வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெற்றிலை விவசாயிகள் கூறுகையில்: வெயிலின் தாக்கம் காரணமாக 10 கிலோ விளையும் இடத்தில் இரண்டு கிலோ மட்டுமே விளைச்சல் உள்ளது.
வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் விளைச்சல் பாதிக்கப்படும். இனி ஆவணியில் மட்டுமே விளைச்சல் இருக்கும், தற்போது மழை பெய்துள்ளதால் ஓரளவிற்கு வெற்றிலை விளைச்சலுக்கு வர வாய்ப்புள்ளது. திருப்புவனத்தில் இருந்து பெங்களூரூக்கு வெற்றிலை விற்பனைக்கு அனுப்பட்டுள்ள நிலையில் தற்போது பெங்களுரூவில் இருந்து வெற்றிலை வரவழைக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறோம், என்றனர்.
No comments:
Post a Comment