கோடை விவசாயத்தால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 June 2022

கோடை விவசாயத்தால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் மழை, வைகை ஆற்றில் வரும் தண்ணீர் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அதிகமாக வாழை, நெல் போன்றவை பயிரிடப்படுகின்றன. ஏற்கனவே வழக்கமான சாகுபடி முடிந்து தற்போது மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கோடை விவசாயமாக நெல் பயிரிடப்பட்டுள்ளது.


கிணறுகளில் உள்ள தண்ணீர் மற்றும் கண்மாய்களில் உள்ள தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் முளைத்து விவசாய நிலங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் தெரிவித்தனர். 


கடந்த 2 ஆண்டு காலமாக மானாமதுரை திருப்புவனம் பகுதிகளல் பருவகால சாகுபடி முடிந்து கோடைகாலத்திலும் கோடை சாகுபடி செய்வது தொடர்ந்து வருகிறது. தண்ணீர் வசதி இருப்பதால் கோடை சாகுபடி செய்ய முடிகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad