மானாமதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 June 2022

மானாமதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி.

மாதிரி படம். Image Source: Google. 
மானாமதுரை பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்று உள்ளது. இங்கு தினமும் 10 முதல் 15 லட்சம் வரை பணம் நிரப்பப்படும் நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் பணம் எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். 

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்த நிலையில் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.


இதனையடுத்து தப்பியோடிய மர்ம நபர் குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதனுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad