முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 June 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்.

சிவகங்கை அரண்மனை வாசலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.


சிவகங்கை அரண்மனை முன்பு  முன்னாள் முதல்வரும்  அதிமுக   ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னை வானகரத்தில் கடந்த  23-6-2022 பொதுக்குழுவில் அவமரியாதை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், கேபி முனுசாமி RB உதயகுமார், D. ஜெய குமார்  ஆகியோரை  கண்டித்து இன்று சிவகங்கை அரண்மனை வாசலில்  சண்முகராஜா கலையரங்கம் முன்பாக  மாநில மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர் விஎம்.ஆசைத்தம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் ஆவின் சேர்மனும் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான அசோகன், தாயமங்களம் அய்யாசாமி, மாநில அம்மா பேரவை இணை செயலாளர் சின்னையா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர்  இராமசாமி மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உள்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு   முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

No comments:

Post a Comment

Post Top Ad