மின் வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான கவுண்டர்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 May 2022

மின் வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான கவுண்டர்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி.

சிவகங்கை மின் வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான கவுண்டர்கள் குறைக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு அருகிலேயே மின்கட்டணம் செலுத்த கவுண்டர்கள் இயங்கின. கடந்த காலங்களில் மின் கட்டணம் வசூலிப்பதற்கு ஆறு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தன. மின் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தலாம், என்ற நிலை வந்த பின்பு 3 கவுண்டர்களாக குறைக்கப்பட்டன.


சிவகங்கையில் நகரில் மட்டும் 35 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. புறநகர் பகுதியில்15 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. மலம்பட்டி பிரிவில் 16 ஆயிரம் மின்இணைப்புகள் உள்ளன. இவை மூன்றுக்கும் தனித்தனியே கவுண்டர்கள் போடப்பட்டுமின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.


தற்போது நேற்று முதல் ஒரே ஒரு கவுண்டர்மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கும் போது மின் வாரியம் சார்பில் அனைத்து கட்டணங்களும் ஆன்லைன்மூலம், மொபைல் ஆப் மூலம் செலுத்துவதால் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர்களைபடிப்படியாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு 3கவுண்டர் ஒரு கவுண்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் கவுண்டரில் தான்கட்டணம் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை என்கின்றனர்.


பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கும் போது கட்டணம் செலுத்த நேரில் கிராமப்புறங்களில்உள்ள மக்கள் மொபைல் ஆப், ஆன்லைன் கட்டணம் செலுத்த தெரியாததால் தான் மின்வாரிய அலுவலக கவுண்டர்களுக்கு வருகின்றனர். இங்கு இருந்த கவுண்டர்களைமூடியுள்ளதால் மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது.


மின் வாரிய பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கும் போது: நிறைய அரசு அலுவலகங்கள்உள்ளன. அவைகள் அனைத்தும் டிமான்ட் டிராப்டாகவோ, செக்காகவோ தான் பணம் செலுத்துவார்கள், அதனை பெற்று ரசீது வழங்க மின் வாரியத்தால் மட்டுமே முடியும். மக்கள் கட்டணம் செலுத்த வரும் போது ஆன்லைனில் தாமதம் ஏற்படுகிறது.


மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. கூடுதலாக ஒரு கவுண்டராவது அதிகரிக்க முன்வர வேண்டும், என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad