பிளாஸ்டிக் ரெய்டு: நகராட்சி ஊழியர்களுக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் கடும் வாக்குவாதம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

பிளாஸ்டிக் ரெய்டு: நகராட்சி ஊழியர்களுக்கும் வர்த்தக சங்கத்தினருக்கும் கடும் வாக்குவாதம்.

சிவகங்கை நகராட்சியை தூய்மை மிகு நகரமாக மாற்ற புதிதாக பொருப்பேற்ற நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி புதிய ஆணையாளர் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் நேற்று சிவகங்கை காந்தி வீதி பகுதியில் உள்ள 120 கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்க்கொண்டனர். 

அதில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், கப்புகள் மற்றும் மெகா சைஸ் பைகள் உள்ளிட்ட 595 கிலோ அளவிலான ப்ளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் இன்று நேரு பஜாரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுகடை வியாபாரிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கப்பு மூலம் டீ, காப்பி விற்கப்படுவதாகவும், பிளாஸ்டிக் உற்பத்தி செய்து மாவட்டத்தின் உள்ளே வருவதை முழுமையாக தடை செய்ய வேண்டும், எங்களைப் போன்று சிறு குறு வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர் மூலம் பார்சல் செய்து எவ்வாறு கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். 


எனவே நகராட்சி நிர்வாகம் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad