விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரு.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரு.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு.

சிவகங்கை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரு.50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுர் அருகே உள்ள கே.இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயியான இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு விவசாய பணிக்கு சென்றிருந்தார். பின்னர் மதிய உணவிற்காக பிற்பகல் 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட பழனிசாமி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.


தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மர்மநபர்கள் பீரோக்களை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ரு. 50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பழனிசாமி, புழுதிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad