அழகப்பா அரசு கல்லூரி வேதியியல் துறை பேராசிரியருக்கு இந்தியன் மெம்ப்ரேன் சொசைட்டி (IMS-Indian Membrane Society) விருது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 April 2026

அழகப்பா அரசு கல்லூரி வேதியியல் துறை பேராசிரியருக்கு இந்தியன் மெம்ப்ரேன் சொசைட்டி (IMS-Indian Membrane Society) விருது

 


அழகப்பா அரசு கல்லூரி வேதியியல் துறை பேராசிரியருக்கு இந்தியன் மெம்ப்ரேன் சொசைட்டி (IMS-Indian Membrane Society) விருது


அழகப்பா அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறையில் இணைப்பேராசிரியராக பணிபுரியும் முனைவர் நாகேந்திரன் இந்தியன் மெம்ப்ரேன் சொசைட்டியின் Mid-Career Fellow விருதை இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT)-பம்பாயில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பெற்றுள்ளார். IMS துவங்கி நாற்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விருதுகள் வழங்கப்படுகிறது. இத்துறையில் இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு, எரிபொருள் மின்கலங்கள் (Fuel Cells) மற்றும் ஆக்சிஜனேற்ற ஒடுக்கப் பாய்வு மின்கலம் (Redox-Flow Battery) ஆகியவற்றிற்கு தேவையான நீடித்து உழைக்கும் மற்றும் குறைந்த செலவிலான மெம்ப்ரேன்களை தயாரித்தல் இவரது ஆய்வு பணியின் முக்கிய நோக்கமாகும். முனைவர் நாகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை அண்ணா பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அழகப்பா அரசு கல்லூரியில் 2009-ம் ஆண்டு வேதியியல் துறையில் பணியில் சேர்ந்தார். இவரின் ஆய்வு வழிகாட்டுதலில் 8 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர், மேலும் தற்பொழுது 4 பேர் முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். இவர் சுமார் ரூபாய் 70 லட்சம் நிதியாக UGC, DST-Young Scientist, DST-SERB-EMR மற்றும் CSIR ஆராய்ச்சி திட்டங்களில் பெற்று, அதன் மூலம் பாலிமெரிக் மெட்டீரியல்ஸ் ஆய்வு கூடத்தை அமைத்து ஆய்வு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இதுவரை 85 ஆய்வு கட்டுரைகளை peer-reviewed இதழ்களில் வெளியிட்டுள்ளார், அவை 3850 முறை மேற்கோள் (Citations) காட்டப்பட்டுள்ளது. இவரின் ஆராய்ச்சியாளர் தரக்குறியீடுகள் h-index 41 மற்றும் i-10 index 74 ஆக உள்ளது. இவரிடம் முனைவர் பட்டம் பெற்று Post-Doctoral Fellow ஆக பல மாணவர்கள் சீனா, கத்தார் போன்ற நாடுகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டும் மற்றும் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், ஒட்டாவா பல்கலைக்கழகம், கனடா உட்பட பல சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் பேராசிரியர்களுடன் கூட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவ்விருதை பெற்றதற்காக, முனைவர் நாகேந்திரனுக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி, வேதியியல் துறைத் தலைவர் முனைவர் லெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad