மானாமதுரையில் புத்தகத்திற்கு பதிலாக மாணவர்கள் போதை பொருட்களை பள்ளிக்கு சுமந்து சென்ற அவலம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் பேருந்து நிலையம் அருகில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் புத்தகப்பையில் போதைப்பொருட்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பள்ளிக்கு எடுத்து செல்வதாக சிவகங்கை மாவட்ட ஆசிரியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது இதனையடுத்து கோட்டாட்சியர் விஜயகுமார் அவர்களின் தலைமையிலும், வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரவர்மன் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலையிலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் முடி திருத்தம் செய்யாமல் வந்த மாணவர்கள், சாதி ரீதியிலான அடையாளங்களில் உடைய பொருட்களுடன் வந்த மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறத்தனர். மேலும் சாதி ரீதியிலான பொருட்களை உபயோகப்படுத்த கூடாது, போதைப்பொருட்களான கூல்லிப் மற்றும் ஹான்ஸ், ஆபத்தான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்திற்குள் எடுத்து செல்ல கூடாது என்று மாணவர்களிடம் அரசு அதிகாரிகள் தரப்பிலும், பள்ளி நிர்வாகம் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டதோடு, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
கடந்த வருடங்களில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வந்த நிலையில், சாதி ரீதியிலான பொருட்கள் மற்றும் சாதி ரீதியிலான தாக்குதல் போன்ற பிரச்சனைகளின் காரணமாக பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு அரசு துறைகளில் அதிகாரிகளாக உருவாக்கப்பட்ட இப்பள்ளியின் இன்றைய அவலநிலையை எண்ணி வேதனையை தெரிவித்ததோடு, உடனடியாக இப்பள்ளியை மீட்டெடுக்க பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளி நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையையும் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment