மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் ஸ்ரீ திருங்கடம்மாபேராண்டாள் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ திருங்கடம்மாபேராண்டாள் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா குரோதி வருடம் ஆவணி மாதம் 7ஆம் தேதி காலை சுமார் 9 முதல் 10.30 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஹா அபிஷேகம் மற்றும் பிரசாதம் வழங்குதல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் காலை 11 மணி அளவில் கோவில் முன்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
No comments:
Post a Comment