சென்னையில் சவுத் இந்தியன் கராத்தே சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மானாமதுரையை சேர்ந்த பள்ளி மாணவன்.
சவுத் இந்தியன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் மயிலாப்பூரில் உள்ள மான்போர்ட் இன்டூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் சார்பாக கராத்தே பள்ளியில் பயின்று வரும் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்த துரைராஜ் (வருவாய்துறை) மேனகா தம்பதிகளின் மகன் து. ஜெகத் அர்சிக் என்ற பள்ளி மாணவன் சவுத் இந்தியன் கராத்தே சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் முதல் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற ஜெகத் அர்சிகை பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நாகர்ஜுன் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளி நிறுவனர் மற்றும் கராத்தே மாஸ்டர் பயிற்சியாளர் சிவா. நாகர்ஜுன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment