சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் குழுவின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வரும், தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் துரை தலைமை வகித்து போதை ஒழிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர்கள் கருப்பையா மற்றும் அம்பலவாணன் ஆகியோர் போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப் பொருள்களை ஒழிப்பதில் மாணவர்களின் கடமை குறித்தும் விளக்கிப் பேசினர். போதைப் பழக்கத்தால் மாணவர்களின் நண்பர்களோ, உறவினர்களோ, யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், போதைப் பழக்கத்திற்கு யாரும் ஆளாகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது என்பதை விளக்கிக் கூறினர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் ஏற்பாடுகளை செய்திருந்தார். முதுகலை வரலாற்று மாணவர் பாலசுப்ரமணி நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரியின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் முனைவர் குணசேகரன், முனைவர் வேலாயுத ராஜா, உடற்கல்வி இயக்குனர் முனைவர் அசோக் குமார் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் முனைவர் தங்கராஜ், முனைவர் கிளிமொழி, முனைவர் சுரேஷ், முனைவர் சுவாமிநாதன் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment