இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு தியாகி இமானுவேல் பேரவையினர் போராட்டம்.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தியாகி இமானுவேல் பேரவை மற்றும் கீழாயூர் காலனி கிராம பொதுமக்கள் சார்பாக மாபெரும் ஆவணகளை ஒப்படைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கீழாயூர் காலனியில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவும், கொடுத்த பட்டாவை ரத்து செய்ததற்கான தகுந்த விளக்க கேட்டும், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவும், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பீஸ் மீட்டிங்கில் கொடுத்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு கொடுத்த ஆவணங்களை அரசிடமே ஒப்படைக்கும் போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment