சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் செங்கோட்டை - பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 August 2024

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் செங்கோட்டை - பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் செங்கோட்டை - பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் முதன் முறையாக பெங்களுரு வழியாக மைசூருக்கு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக நேரடி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது இந்தியன் தெற்கு ரயில்வே. வண்டி எண் 06242 கொண்டு செங்கோட்டை - மைசூரு சிறப்பு ரயில் 05.09.2024 மற்றும் 08.09.2024 (வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு சிவகங்கைக்கு இரவு 11.43 மணிக்கு வந்து 11.45 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது அடுத்த நாள் மதியம் 2.20 மணிக்கு மைசூர் சென்றடையும்.


அதேபோல் வண்டி எண் 06241 கொண்டு மைசூர் - செங்கோட்டை சிறப்பு ரயில் வருகின்ற 04.09.2024 மற்றும் 07.09.2024 (புதன் மற்றும் சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மதியம் 12.03 சிவகங்கை வந்துடைந்த பின்னர் 12.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை சென்றடையும்.


இச்சிறப்பு ரயிலானது தென்காசி, கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், குப்பம், பங்காரூபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு சிட்டி சந்திப்பு, கென்கெரி, ராமநகரம், மட்டூர், மந்தையா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், இந்த ரயில் வண்டிக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் இச்சிறப்பு ரயில் வண்டியை ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகம் பயன்படுத்தி பயன்பெறுமாறு தெற்கு ரயில்வே துறையால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad