மானாமதுரையில் சாலைகள் மற்றும் வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் தெருநாய்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 August 2024

மானாமதுரையில் சாலைகள் மற்றும் வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் தெருநாய்கள்.


மானாமதுரையில் சாலைகள் மற்றும் வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்யும் தெருநாய்கள்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதிகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பிரச்சினையை சரிசெய்திட மானாமதுரை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறி வலியுறுத்தியும், இப்பிரச்சினையை ஒரு பொருட்டாக கண்டுகொள்வதாக தெரியவில்லை என மானாமதுரை நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். 


ஏற்கனவே சில வார்டு பகுதிகளில் தெருநாய்கள் கடித்ததில் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நகராட்சி கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்களது புகாரை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் இத்தெருநாய்களின் அட்டூழியம் பூதாகரமாக மாறி குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாமல் தடுத்திட இப்பொழுதாவது இப்பிரச்சினைக்கு முழுமையான திர்வு கிடைக்குமா என நகராட்சி நிர்வாகத்திடம் தாங்கள் எதிர்பார்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad