சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படையின் சார்பாக இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சியும் பேரணியும் இன்று நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி துவக்கி வைத்த தேசிய மாணவர் படையின், இப்பேரணி காரைக்குடி ஆரிய பவன் சந்திப்பில் துவங்கி புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாகவும், பொது மக்களுக்கு நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கோடும், அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் பொதுமக்களுக்கு தேசியக் கொடியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பாஸ்கர், போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்கள் மாடசாமி, அசோகன் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் சார்பு ஆய்வாளர் பூமி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் அழகப்பா அரசை கலைக் கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment