அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 78வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து தலைமை வகித்து, இந்திய திருநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவு கூர்ந்து இந்த நாளில் அவர்களைப் போற்ற வேண்டும் என்று கூறி சுதந்திர தின விழா சிறப்புரையாற்றினார்.
தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் துரை வரவேற்புரை வழங்கினார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்போடு மாணவர்களால் மும்மத பாடல்களும் பாடப்பட்டன. கல்லூரியின் தாவரவியல் துறையில் பணியாற்றி இவ்வாண்டு பணி நிறைவு பெறும் மீனாட்சி அம்மாள் கெளரவிக்கப்பட்டார். தேசிய மாணவர் படை மற்றும் நுண்கலை மன்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார் நன்றி கூறினார்.தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன், உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் லெட்சுமணக்குமார், முனைவர் செந்தில்குமார், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், நுண்கலை மன்ற உறுப்பினர்கள் முனைவர் சர்மிளா, முனைவர் செல்வமீனா, யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் பாரதி ராணி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment