சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதுகலைப் படிப்புகளான எம்.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம், மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளான எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவி அமைப்பியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்புப் பிரிவினருக்கும், பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30மணிக்கும், பொதுப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிக்கும் கல்லூரியில் பாடம் தொடர்புடைய அந்தந்தத் துறைகளில் நடைபெற இருப்பதால் விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் 10, 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு, இளநிலை பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,சிறப்பு பிரிவினராக இருப்பின் அதற்குரிய அனைத்துச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டும் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என முதல்வர் பெத்தாலெட்சுமி தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment