3 டன் மஞ்சளுடன் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனம் 15 நாட்களாக வழக்கு பதிவு செய்யாமல் மானாமதுரை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டடது ஏன்?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மினி சரக்கு வாகனத்தில் சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 3 டன் கடத்தல் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் நிற்பதாக செய்தியாளர்களுக்கு தகவல் கிடைக்க பெற்றது. இதனை அடுத்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க நகர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தெரிவித்துவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது காவல் நிலையத்தின் உள்ளே இருந்து வந்த காவலர்கள் யார் அனுமதி உடன் படம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என மிரட்டும் தோணியில் பத்திரிகையாளர்களை வினவினார். இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாராவில் உள்ள காவலரிடம் தகவல் தெரிவித்து விட்டுதான் படம் பிடித்தாக செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்ததை அடுத்து காவலர்கள் அமைதி அடைந்தனர்.
பின்னர் 15 நாட்களாக மஞ்சளுடன் சரக்கு வாகனம் நிற்பதாக தெரிவித்த காவலர்கள் முழு விவரங்களையும் ஆய்வாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர். 15 நாட்களாக கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனம் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என செய்தியாளர்கள் கேட்டதும் காவலர்கள் நழுவினர். முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் சரக்கு வாகனம் இருப்பதால் விபத்து ஏதும் ஏற்பட்டதா? வாகன ஓட்டுநர் தப்பி சென்றது ஏன்? இதுவரை சரக்கு வாகன உரிமையாளர் உரிமைகோர வராதது ஏன்? கடத்தல் மஞ்சள் எங்கு கொண்டு செல்லப்பட்டது? என்ற பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், உயர் அதிகாரிகளுக்கும் தெரியாமல் 15 நாட்களாக காவல் நிலையத்தில் சுமார் 7 லட்சம் மதிப்பிலான மஞ்சளுடன் சரக்கு வாகனம் கைப்பற்றப்பட்டு இதுவரை வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என்பது குறித்த பல சந்தேகங்களை கிளப்பும் இப்பிரச்சினையால் காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு இங்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது.
எனவே உயர் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யாத ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். மேலும் தங்களது குற்றங்களை மறைக்க பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையின் மிரட்டல் போக்கு கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற ஒரு சில காவல் அதிகாரிகள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது என்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment