காரைக்குடியில் இரண்டு வழிப்பறி கொள்ளையர்கள் கைது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 12 May 2024

காரைக்குடியில் இரண்டு வழிப்பறி கொள்ளையர்கள் கைது.

 


காரைக்குடியில் இரண்டு வழிப்பறி கொள்ளையர்கள் கைது. 

கொள்ளையர்களிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல். 


காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு காவல் சரகம் காயாம் பட்டி மற்றும் காரைக்குடி புதிய அரசு மருத்துவமனை பின்புறம் ஆகிய இடங்களில் கடந்த 20. 3 .2024ஆம் தேதி நடந்த வழிப்பறி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு டோங்கரே பிரவீன் உமேஷ் I.P.S அவர்களின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு இளவரசு என்பவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 


தனிப்படை காவல் ஆய்வாளர் திரு இளவரசு தலைமையிலான தனிப்படை தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வpulsar. இந்த நிலையில் இன்று 12/5/2024 ம் தேதி மதியம் தனி படையினர் சூரக்குடி நான்கு ரோடு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது மதியம் சுமார் 1:15 மணிக்கு tn-63-AV-3764 என்ற pulsar வாகனத்தில் வந்தவர்கள் போலீஸ்பார்டியரை கண்டதும் தப்பி ஓடியவர்களை மடக்கிப்பிடித்து இருசக்கர வாகனத்தில் வந்த அவர்களை விசாரணை செய்த போது காரைக்குடி அண்ணாநகர் மாஜி தெருவை சேர்ந்த திரு கண்ணன் என்பவரது மகன்முத்துராமன் வயது 30/24 மற்றும் காரைக்குடி அண்ணாநகர் மாதவன் தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் செல்வகணபதி வயது 26/24 ஆகியோர்கள் கடந்த 20 /3/ 2024 ஆம் தேதி காயாம்பட்டி மற்றும் அரசு மருத்துவமனை பின்புறம் நடந்த இரு வழிப்பறி வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளது ஒப்புக் கொண்டவர்களை கைது செய்து மேலும் விசாரணை செய்தபோது கடந்த 17/ 10/ 2023 ஆம் தேதி காரைக்குடி நவரத்தின நகர் மூன்றாவது வீதியில் நடந்த வழிப்பறி முயற்சி வழக்கிலும் கடந்த 22 /2/ 2024 ஆம் தேதி காரைக்குடி பர்மா காலனி அறிவியல் மையத்தின் அருகேTN-63-AP-8807 என்ற பதிவு எண் கொண்ட Honda Deo இருசக்கர வாகனத்தை திருடி உள்ளதும் கடந்த 12/4/2024 ஆம் தேதி காரைக்குடி லீடர் பள்ளி பின்புறம் நடந்த வழிப்பறி முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. 


மேற்படி எதிரிகள் இருவரிடம் இருந்து சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நகை TN-63-AP-8807 என்ற பதிவு எண் கொண்ட ஹோண்டா டியோ இருசக்கர வாகனம் மற்றும்TN-63-AV-3764 என்ற pulsar வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


சிறப்பாக பணிபுரிந்து தொடர்ந்து வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து வழக்கு சொத்துக்களை கைப்பற்றிய காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு இளவரசு என்பவர் தலைமையிலான தனிப்படையினரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad