இளையான்குடியில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய கூட்டுறவு துறை அமைச்சர்.
கோடை கால வெப்பத்தைத் எதிர்கொள்ளும் வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி பேரூர் திமுக சார்பில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்டக் கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கி நிர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப. மதியரசன், பேரூர் கழகச் செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் நஜுமுதீன், இளையான்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப .தமிழரசன், பொருளாளர் இப்ராஹிம், இளைஞர் அணி பைரோஸ்கான், ஜெலாலுதீன், ஆரிப், ராஜவேல், கண்ணன், காளிமுத்து, சிவநேசன், கருணாகரன், மணி மற்றும் கழக முன்னோடிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment